வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 1



அன்னை உமைபாலா ! ஆறு முகத்தழகா !
உன்னைச் சரணடைய ஓடிவந்தேன் ! - பொன்னழகா !
ஆறு படைவீடும் அன்பர் புகலன்றோ !
கூறு படைவேலா கூறு !



கூறும் அடியாரின் குற்றம் களைபவனே !
வேறு புகலில்லை வேலழகா ! - ஏறுமயில்
நாயகனே ! எல்லார்க்கும் நம்பிக்கை ஆனவனே !
போயகல மாட்டேன் புகல் !



புகலென்று வந்தவர்க்குப் புன்முறுவல் காட்டித்
தகவுடைய செய்யும் தயையோய் ! - மிகவும்
கருணை பொழிகின்ற கந்தா ! - நினைந்தே
உருகும் ஒருவனிங் குண்டு !



உண்டென்று சொல்வார்க்கே உண்டென்ப தோடின்றி
உண்டா எனவினவி உள்ளார்க்கும் - உண்டன்றோ ?
தந்தைக் குபதேசம் தந்தவனே ! - சண்முகனே !
சிந்தை மகிழும் சிறப்பு !



சிறப்புக் குரியவனே ! செந்தூர் முருகா !
பிறப்புப் பிணிபோக்கும் பேறே ! - மறவேனே !
சேவற் கொடியேந்தும் செவ்வேள் முழுமுதலே !
காவலாய் வந்தென்னைக் கா !




காவா திருப்பாயா கார்த்திகை மைந்தனே !
தாவா திருக்குமெனைத் தாங்கிடுவாய் ! - நாவாரச்
சொற்றமிழ்ப் பாமாலை சூட்டிட வேயெனக்கு,
நற்றமிழ் நெஞ்சத்தை நல்கு !



இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.

புதையல்