வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கொச்சையாக்கலாமா ?




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

அவன் என்னைக் கொச்சைப்படுத்திவிட்டான் என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்; சினப்படுகின்றோம்.


கொச்சைப்படுத்துதல் என்றால் என்ன ?


போருக்குச் சொல்லும் குதிரைகளை அந்நாளில் அழகுபடுத்துவர். குதிரைகளின் கழுத்தில் நீண்டு வளர்ந்து தொங்கும் பிடரிமயிரைக் கத்தரித்து விடுவதும் அந்த அழகு செய்வதில் அடங்கும்.இவ்வாறு கத்தரித்து விடப்பட்ட பிடரிமயிரை உடைய குதிரையைக் " கொய்யுளை மா " என்று சொல்லுவர்.


" கொய்தல் " என்பதற்குக் குறைத்தல் என்பது பொருள். " உளை " என்பதற்கு அசைகின்ற பிடரிமயிர் என்பது பொருள். மயிர் குறைக்கப்பட்ட மாவே இங்குக் " கொய்யுளை மா " எனப்பட்டது.


இந்தக் கொய்தல் அடியாகத்தான்

கொய் - ‍கொய்சு - கொய்ச்சு - கொய்ச்சை - கொச்சை

என்னும் சொற்களும் தோன்றின. ஒருவருக்கு உரிய மதிப்பைக் குறைத்து விடுதலே " கொச்சைப்படுத்துதல் " என்பதற்குப் பொருளாகும்.


மொழிவழக்கிலும் கொச்சைவழக்கு என்பது இன்று பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
மொழியில் உள்ள சொற்களைச் செப்பமாகப் பேசாமல் அதனதன் வடிவைச் சிதைத்துக் குறைத்துப் பேசுவதே " கொச்சை " என்பதற்குப் பொருளாகும்.


சொற்களை அப்படியே முழுமையாகப் பேச முடியாமல் திரித்துக் குறைத்துப் பேசுவதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததே. சான்றோர்கள் வழக்கிலும் இது நிகழ்ந்து வந்துள்ளது.


" இந்தப் பூவினை மோந்துபார் " என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் " முகர்ந்து பார் " என்பதுதான்.

முகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.


முகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.


திருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு " மோப்பக் குழையும் அனிச்சம் " என்றே சொல்லியுள்ளார்.

மொழியின் சொற்கள் பலவும் இவ்வாறு பேச்சு வழக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. பேச்சுத்தமிழ் என்பது பெரும்பாலும் முழுச்சொற்களின் சிதைந்த வடிவங்களையே கொண்டுள்ளது.

வந்து ஆயிற்று என்பது " வந்தாச்சு " என்றும் தின்று ஆயிற்று என்பது " தின்னாச்சு " என்றும் திரிவது போல நிறையச் சொல்லலாம்.

எளிமை காரணமாக - ‍விரைவு காரணமாக மொழியின் சொற்கள் பேச்சு வழக்கில் திரியலாம். மொழியின் இந்த இயல்பை உணராமல் பேச்சு வழக்குத்தான் உண்மையான தமிழ். அந்தத் தமிழைத்தான் எழுதவும் வேண்டும் என்போர்கூட நம்மிடையை உள்ளனர்.


" நஞ்ச , புஞ்ச " என்று பேசுகிறோம். ஆதிமாந்தன் வேளாண்மையை எப்படி உருவாக்கினான் என்ற வரலாற்றை இந்தக் கொச்சை வழக்கினால் அறிந்து கொள்ள முடியாது.கல்லும் முள்ளுமாய் இருந்த நிலம் விளைவிற்காகச் செய்யப்பட்டது.அதுவே " செய் " என்று ஆயிற்று. தமிழில் " செய் " என்பதற்கு " நிலம் " என்று பொருள். நன்றாகச் செய்யப்பட்ட நிலம் " நன்செய் " என்றும் புன்மையாகச் செய்யப்பட்ட நிலம் " புன்செய் " என்றும் இந்த வகையில்தான் பெயர் பெற்றன.


நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.



அறிவோம் பயன்படுத்துவோம் - 2

சொற்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் மட்டுமல்ல, வாழ்வியலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.வட்டாரச் சொற்கள் சொல்லும்பொழுது உண்டாகும் உற்சாகமும் உணர்வும் உரைப்பதற்கு இல்லை.அந்த வகையில் பல கொங்கு வட்டாரச் சொற்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

1.கொண்டயம்

நமக்கு வாழ்க்கையில் பயன்படுத்திய சொற்கள் என்றால் அது கொம்பும் கொண்டையும் தான். அவை இரண்டும் தலைக்கு மேலுள்ளவற்றைக் குறிப்பது. அதாவது உச்சியை, அது போல தான் கொண்ட‌ய‌ம் என்னும் சொல்லும் கொங்கு வ‌ட்டார‌த்தில் போர், வீட்டின் கூரை, ம‌ர‌ம் போன்ற‌வ‌ற்றின் உச்சியைச் சுட்டிக் காட்டும். வழக்கில் சொல்லும் போது " கொண்டயம் மேயோனும் கொண்டயத்துல ஏறிக்கிட்டான் " என்பதுண்டு.



கொடு - கோடு



கொண்டை - கொண்டயம் - கொம்பு



என்று எப்படி எல்லாம் தமிழ்ச் சொல் உருவாகின்றன.பாருங்கள்

2.சூட்டிப்பு

சுறுசுறுப்பையும் கவனிப்பையும் தெரியும்.அது என்ன சூட்டிப்பு ? சுறுசுறுப்பாக‌ இருப்பவர்கள் விவரமாக இருப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அந்த இரண்டையும் ஒருங்கே இணைய பெற்ற தன்மை குறிப்பது தான் சூட்டிப்பு என்பது. பேச்சு வ‌ழக்கில் " பைய‌ன் ந‌ல்ல‌ சூட்டிப்பு " என‌ வ‌ழ‌ங்க‌க் காண‌லாம்.

3.மொடக்கடி



அடிக்கடி வீட்டில் குழந்தைகள் மொடக்கடி செய்து நெருக்கடி உண்டாக்கும்.மொடக்கடி என்றால் முரண்டு பிடித்தல், ஒத்து வராமை, பிடிவாதம் என்று பொருள் படும்.



முகர்ந்து‍ - மோந்து - மோப்பம் என்று திரிந்த வண்ணம்



முரண்டு‍ -மொரண்டு என்று திரிந்து அழகான ஒரு சொல்லைத் தந்து உள்ளது.



4.ஒணத்தி



குழம்பு நல்ல ஒணத்தியாக இருக்கிறது என சொல்லுவதுண்டு.இங்கே ஒணத்தி என்பது சுவையாக என்று பொருள் படும்.



உண்ணும் பொருள் உணவு எனபது போல்,உண்ணும் உணவு சுவையாக இருந்தால் உணத்தி (ஒணத்தி) அதாவது பருத்தி, அகத்தி போன்று உருவான சொல் தான் ஒணத்தி( உணத்தி) என்பது . உறவினர் எனபது ஒர‌ம்ப‌ரை‍ ‍‍‍‍என்று சொல்ல‌ப்ப‌டுவ‌துண்டு , பேச்சுத்த‌மிழ் உ என்ப‌து ஒ வாக‌ மாறும்.

வட்டாரச் சொற்கள் என்ற உடனே இழிவான சொற்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மேற்கண்ட சொற்களே அந்த எண்ணத்தை உடைப்பவையாக உள்ளன என்றால் உண்மை. வட்டாரச் சொற்களை ஆய்வுச் செய்தால் ஆயிரம் ஆயிரம் சொற்களை அள்ளி எடுக்க முடியும். அதுவும் அழகான, அருமையான அமுதச் சொற்களை முடிந்தயளவு வாழ்க்கையிலும் பயன்படுத்தி, தமிழை வாழ வைப்போம்.

இறுதியாக சிங்கையிலே தமிழ்மொழி மாதத்தை ஒட்டி ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்ய‌ப் பட்டுள்ள‌ன‌. அவ‌ற்றைப் ப‌ற்றி ஒரு நிக‌ழ்ச்சி தான் த‌மிழ் வ‌ச‌ந்த‌ம் ஒளிவ‌ழியில் ஒளிப்ப‌ர‌ப்பாகும்
" தமிழை நேசிப்போம் தமிழ்ப் பேசுவோம் " என்னும் நிக‌ழ்ச்சி.

அதைப் ப‌ற்றி ஒரு விழிய‌ம் ( video ) தான் த‌ங்க‌ளின் விழிக‌ளுக்கு

க‌ண்டுக் க‌ளிக்க‌வும்