அழுதாலும் குழந்தை
அழகுமுகம் - அதைவாரி
அணைத்திடும் அன்னை
அன்புமுகம்!
அண்ணன் தங்கை
பாசமுகம் - ஓர்
அழகுக் கன்னி
ஆசைமுகம்!
கருணைகொண்டார்
பரிவுமுகம் - குரு
அறியாமை அகற்றும்
அறிவுமுகம்!
கண்ணோடு கண்ணுரச
மோதல்முகம் - கனிந்து
கண்ணோடு கண்பேச
காதல்முகம்!
வெற்றிப் பாதையில்
ஏறுமுகம் - திடீர்
வீழ்ச்சிச் சறுக்கலில்
இறங்குமுகம்!
இருபதுகளின் முகம்
அவசரமுகம் - வாழ்ந்த
அறுபதுகளின் முகம்
அனுபவமுகம்!
ஆண்டவன் முருகனுக்கோ
ஆறுமுகம்...
அடடே மனிதா
உனக்குத்தான்
எத்தனை முகங்கள்!
***************************************************
(படித்ததில் பிடித்தது -- கி.கோவிந்தராசு அவர்கள் எழுதிய வேர்களின் வியர்வை என்னும் கவிதைத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதை)