வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label ந.வீ. சத்தியமூர்த்தி. Show all posts
Showing posts with label ந.வீ. சத்தியமூர்த்தி. Show all posts

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 1

( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி
அவர்கள் " உய்ர்திணை உறவு " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )



சேர்ந்து மெதுவோட்டம் வந்த
செல்லநாய்
தள்ளிய கழிவை
சட்டத்திற்குப் பயந்து
தாள் பையில்
சேகரித்தபடியே
ஓரச் சாலையில்
ஓட்டம் தொடர்ந்தான்...

அருகிலிருக்கும்
முதியோர் இல்லத்திலிருந்து
அன்றாடம்
அவனைப் பார்த்து
ஆசுவாசம் கொள்ளும் தாய்
தனக்குள் சொல்லிக் கொண்டாள்
"இப்படித்தானே அள்ளினேன்
மழலையில்
இவன் விட்ட கழிவையும்... "




(இது சில நாட்களுக்கு முன் படித்த சப்பான் கவிதையை ,அப்படியே மொழியாக்கம் செய்துள்ளேன்.)

அன்றாடம் மெதுவோட்டம்
ஆச்சரியத்தில் அனைவரும் ...
எடைகுறைந்தது நாய்மட்டும் என்பதால் !

சுட்ட பழமா??? சுடாத பழமா???

( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி
அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )



அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...

தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த‌
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக‌
தமிழ்க் கடவுள் சாட்சியாக‌
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக‌
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த‌
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!