1.கொண்டயம்
நமக்கு வாழ்க்கையில் பயன்படுத்திய சொற்கள் என்றால் அது கொம்பும் கொண்டையும் தான். அவை இரண்டும் தலைக்கு மேலுள்ளவற்றைக் குறிப்பது. அதாவது உச்சியை, அது போல தான் கொண்டயம் என்னும் சொல்லும் கொங்கு வட்டாரத்தில் போர், வீட்டின் கூரை, மரம் போன்றவற்றின் உச்சியைச் சுட்டிக் காட்டும். வழக்கில் சொல்லும் போது " கொண்டயம் மேயோனும் கொண்டயத்துல ஏறிக்கிட்டான் " என்பதுண்டு.
கொடு - கோடு
கொண்டை - கொண்டயம் - கொம்பு
என்று எப்படி எல்லாம் தமிழ்ச் சொல் உருவாகின்றன.பாருங்கள்
2.சூட்டிப்பு
சுறுசுறுப்பையும் கவனிப்பையும் தெரியும்.அது என்ன சூட்டிப்பு ? சுறுசுறுப்பாக இருப்பவர்கள் விவரமாக இருப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அந்த இரண்டையும் ஒருங்கே இணைய பெற்ற தன்மை குறிப்பது தான் சூட்டிப்பு என்பது. பேச்சு வழக்கில் " பையன் நல்ல சூட்டிப்பு " என வழங்கக் காணலாம்.
3.மொடக்கடி
அடிக்கடி வீட்டில் குழந்தைகள் மொடக்கடி செய்து நெருக்கடி உண்டாக்கும்.மொடக்கடி என்றால் முரண்டு பிடித்தல், ஒத்து வராமை, பிடிவாதம் என்று பொருள் படும்.
முகர்ந்து - மோந்து - மோப்பம் என்று திரிந்த வண்ணம்
முரண்டு -மொரண்டு என்று திரிந்து அழகான ஒரு சொல்லைத் தந்து உள்ளது.
4.ஒணத்தி
குழம்பு நல்ல ஒணத்தியாக இருக்கிறது என சொல்லுவதுண்டு.இங்கே ஒணத்தி என்பது சுவையாக என்று பொருள் படும்.
உண்ணும் பொருள் உணவு எனபது போல்,உண்ணும் உணவு சுவையாக இருந்தால் உணத்தி (ஒணத்தி) அதாவது பருத்தி, அகத்தி போன்று உருவான சொல் தான் ஒணத்தி( உணத்தி) என்பது . உறவினர் எனபது ஒரம்பரை என்று சொல்லப்படுவதுண்டு , பேச்சுத்தமிழ் உ என்பது ஒ வாக மாறும்.
வட்டாரச் சொற்கள் என்ற உடனே இழிவான சொற்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மேற்கண்ட சொற்களே அந்த எண்ணத்தை உடைப்பவையாக உள்ளன என்றால் உண்மை. வட்டாரச் சொற்களை ஆய்வுச் செய்தால் ஆயிரம் ஆயிரம் சொற்களை அள்ளி எடுக்க முடியும். அதுவும் அழகான, அருமையான அமுதச் சொற்களை முடிந்தயளவு வாழ்க்கையிலும் பயன்படுத்தி, தமிழை வாழ வைப்போம்.இறுதியாக சிங்கையிலே தமிழ்மொழி மாதத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றி ஒரு நிகழ்ச்சி தான் தமிழ் வசந்தம் ஒளிவழியில் ஒளிப்பரப்பாகும்
" தமிழை நேசிப்போம் தமிழ்ப் பேசுவோம் " என்னும் நிகழ்ச்சி.
அதைப் பற்றி ஒரு விழியம் ( video ) தான் தங்களின் விழிகளுக்கு
கண்டுக் களிக்கவும்