வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வண்ணா !மல்லரை வென்ற மணிவண்ணா! உந்தன்
மலரடி போதும் மணிவண்ணா! எந்தன்
கவலையைப் போக்கிடும் கார்வண்ணா! இன்பக்
கவிதையைக் கேள் கார்வண்ணா!

அவனியைக் காக்கும் அகில்வண்ணா! உந்தன்
அவயமே போதும் அகில்வண்ணா! எந்தன்
மமதையைக் போக்கும் முகில்வண்ணா! இன்பத்
தமிழ்தனைக் கேள் முகில்வண்ணா!

எண்ணில் இருக்கும் எழில்வண்ணா! உந்தன்
உணர்வொன்றே போதும் எழில்வண்ணா! எந்தன்
பிணியினைப் போக்கும் பிறைவண்ணா ! இன்ப
மணிமொழியைக் கேள் பிறைவண்ணா !

குறையினைத் தீர்க்கும் குழல்வண்ணா ! உந்தன்
குறும்பொன்றே போதும் குழல்வண்ணா ! எந்தன்
வறுமையைப் போக்கும் விழிவண்ணா ! இன்ப
மறையினைக் கேள் விழிவண்ணா !

மகிழ்ச்சியை நல்கும் மலர்வண்ணா ! உந்தன்
மகிமையே போதும் மலர்வண்ணா ! எந்தன்
பிறவியைப் போக்கும் புவிவண்ணா ! இன்பம்
நிறைந்திட கேள் புவிவண்ணா !

***********************************************************************
புன்னகையால் புவியாளும் பாலகனுக்கு பைந்தமிழால் படைக்கும் பாமாலை (வெண்பா மாலை)
*************************************************************************

(ஏ)மாற்றம்...

எழுதுவதற்கு நேரமில்லை
எழுதுகோலுக்கும் வேலையில்லை

எழுத்துப்பிழைக்கும் குறைவில்லை
ஏன் இத்தனையும் ??

எல்லாமே மின்னியல்
என்றாலும் மிகையுமில்லை

எழுச்சியே என்றாலும்
(ஏ)மாற்றமே என்போம்
காலவெள்ளத்தில்
கடிதங்களெல்லாம்
காணாமல் போகுவதைக்
காண்கையில்