வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

உண(ர்)வு !தின்ன தின்ன‌
திகட்டாத தித்திக்கும் உணவு !

கருவறையில்
கிடைத்த உணவு !

காலமெல்லாம் கிடைக்க‌
கடவுளை வேண்டும் உணவு !

அகங்காரம் கொள்ள வைக்கும்
அருமை பெருமை உடைய உணவு !

அலங்காரம் செய்து
அடையாய் வடையாய் அவதரித்து
அவனியில் பவனி வந்தாலும்
விட்டுவைக்காது
வெளுத்துக் கட்டச் சொல்லும்
வகை வகையான உணவு !

காரம் நீயில்லை எனிலென்
ஆவியைப் பறிக்கும் உணவு !

இளக்காரமாய் பணம்
இருப்பவர் பலர் பார்க்கும் உணவு !

பலகாரமாய் நீராகாரமாய்
பக்கத்தில் நீயிருந்தால் போதும்
பொன்னோ பொருளோ
வேண்டாமெனச் சொல்லும் உணவு !

பங்காரமாய் ஏழைகள்
பார்க்கும் உணவு !

சிருங்காரம் செய்து
சிம்மாசனத்தில் வைக்க கூடிய‌
சிறப்பு மிக்க உணவு !

வரும் தலைமுறைக்கு
விவகாரம் ஆகும் உணவு !

ஓம்காரமாய் ஒயாது
ஒலிக்கும் உணவு !

கனவிலும்,காணும்
காட்சியிலும்,பொருளிலும்
கண்முன்னே வந்துநிற்கும் உணவு !

உணவு உணவென‌
உருகும் என்னுருவம் கண்டால்
உங்களையும் கொஞ்சம்
உண்ணச் சொல்லும் உணவு !

என்றும் எப்பொழுதும்
என்னை இளமையாக வைத்திருக்க‌
என் அருமை தாய்
எனக்கு ஊட்டிய தமிழுண(ர்)வு !