வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

களம் - Collum
(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

நமது சொற்களத்தில் இப்பொழுது காணவுள்ள ஒரு சொல் " களம் " ஆகும்.

நெற்கதிர்கள் அறுக்கப்பட்டுக் களத்திற்கு வருகின்றன; வீரர்கள் போர்க்களத்தில் தங்கள் பகைவர்களைச் சந்திக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்; கலைஞர்கள் கூத்தாடும் ஆடுகளத்தில் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருக்கிறார்கள்; ஆயுதக்களத்தில் ஏராளமான ஆயுதங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.இப்படி இன்னும் பலப்பல களங்கள் நம் மொழி வழக்கில் இடம்பெற்றுள்ளன.

மேற்சொல்லப்பட்ட தொடர்களில் வரும் எல்லாக்களமும் ஒரே பொருள் உடையவை. வயற்களம், போர்க்களம், ஆடுக்களம், ஆயுதக்களம் போன்ற எக்களம் ஆயினும் அனைத்திற்கும் கூடும் இடம் என்கின்றவொன்றே அடிப்படைப் பொருளாகும்.

பத்துக் காணி நிலத்தில் விளைந்த நெல் ஓரிடத்தில் குவிக்கப்படும் இடமே வயற்களம்; இருநாட்டுப் படைவீரர்களும் ஓரிடத்தில் வந்து கூடிப் போர் செய்யும் இடமே போர்க்களம்; ஆயுதங்கள் குவிக்கப்பட்ட இடமே ஆயுதக்களம்; ஊர்மக்கள் யாவரும் வீடுகளைவிட்டுக் கூத்து நடக்கும் இடத்தில் கூடியிருக்கும் இடமே ஆடுக்களம்.

களம் என்னும் சொல் கள் + அம் என்பதாகப் பிரியும். இந்தக் " கள் " என்பதற்கு கூட்டம் என்பதே வேர்ப்பொருள். மாடு - மாடுகள்; வீடு - வீடுகள் என்றவிடத்தில் " கள் " பன்மையீறு எனப்படும்.இந்தப் பன்மையீறு " கள் " ளும் " களம் " சொல்லின் " கள் " ளும் வேறல்ல.

மக்கள் பருகும் " கள் " உண்டல்லவா அதுகூட இந்தக் கூட்டப் பொருளில் உருவானதே. மாலையில் வெறுங்கலத்தைக் கட்டிவிட்டு வரும் " கள் " இறக்குபவர் மறுநாள் காலையில் கலயம் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார். இங்கே நிகழ்ந்தது சிறுதுளிப் பெருவெள்ளம் என்கின்ற உண்மையே.

" களம் " என்னும் சொல்லிற்குக் கழுத்து என்னும் பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்திலும், திருமந்திரத்திலும் இப்பொருளில் ஆட்சி உண்டு. மேலைய களங்கட்கும் இந்தக் கழுத்துக் களத்திற்கும் உறவிருக்கிறது. நமது உடம்பில் கழுத்து வரை உள்ள உடல் ஒரு பகுதி. கழுத்திற்கு மேலே உள்ள கண், மூக்கு, வாய் , காது ஆகியவை அடங்கிய தலை, பிறிதொரு பகுதி. இந்த இரு பகுதிகளையும் கூட்டுவிக்கும் காரணத்தால் தான் கழுத்திற்குக் " களம் " என்னும் பொருள் பொருந்துவதாயிற்று.
C.O.D அகராதி கழுத்தைக் குறிக்கும் " neck " என்னும் சொல்லிற்குக் கூறும் முதற்பொருள் வரையறை இதுதான்.

neck - the part of the body of an animal or human being that connects the head and the trunk.

இலத்தீன் மொழியில் " Collum " என்னும் சொல் கழுத்தைக் குறிக்கும். இந்த " Collum " என்பதிலிருந்துதான் மேற்சட்டையின் கழுத்துப் பட்டியைக் குறிக்கும் " Collar " என்னும் சொல் உருவானதாக ஆங்கில அகராதிகள் தெரிவிக்கின்றன.Collum - the neck, Lit. of men and animals; - cassela Latin Dictionary

Collar - (F.,L.) ME. coler; OF. colier, - a coller; L. collare - a band for the neck;L . Collum - the neck ; + AS. heals; G. hals - neck. - SKEAT.

ஆங்கிலோ சாக்சன், செருமன் மொழிகளில் " களம் " என்னும் தமிழின் நெருங்கிய வடிவே இருப்பதைக் கீற்று அகராதியில் காண்க.