வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

மார்கழிப் பொழுதுகண்ணனைக் கண்டால் கவலைகள் ஓடிடும்
கண்ணனைப் போற்றினால் குற்றங்கள் நீங்கிடும்
கண்ணனை எண்ணினால் இன்பங்கள் பொங்கிடும்
பெண்களே கண்விழியுங் கள்.
மாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம்
பாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம்
நாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம்
வாவா மணிவண்ணா வா.

நாராலே பூவும் சரமாகி மாலையாகும்;
நீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;
யாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்
நாரா யணின்நாமத் தை