அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )

அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...
தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக
தமிழ்க் கடவுள் சாட்சியாக
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!