அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 2
தொகுப்பு தமிழ் at 8:33 PMமுதல் பகுதியைப் படிக்க , பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்
நல்கிடச் செய்திடுவாய் நற்றமிழ்த் தெய்வமே !
பல்கிடச் செய்திடுவாய் பன்னலமும் ! - தொல்புவியில்
உன்னையான் விட்டகலேன் ! உண்மையில் நீதானே
என்னை நடத்தும் இறை !
இறையென்றால் நீயன்றோ ! இல்லை இருளன்றோ !
மறைபோற்றும் தெய்வ மணியே ! - நிறையன்றோ !
உன்னைத் துதித்திட உண்ணா முலைமகனே !
என்னிற் கலந்தே இரு !
இருந்தும் இனித்தும் இசைவிப் பவனே !
திருத்தி மனத்தைத் தெளிவி ! - ஒருபொருளே !
குன்றம் அமர்ந்தவனே ! கொஞ்சும் அழகோனே !
என்றும் அடிமையே யான் !
யானெனும் எண்ணந்தான் யாண்டும் எழாமல்,
ஊனெனும் எண்ணத்தை உள்வைத்தேன் ! - மானெனும்
வள்ளிக் குறத்தியின் வாழ்வில் கலந்தவனே !
அள்ளிப் பருகும் அழகு !
அழகு மயிலேறி ஆடும் முருகா !
பழகு தமிழ்தந்த பாங்கே ! - பழனிவாழ்
முக்கண் திருமகனே ! மூவர்க்கும் ஏற்றவனே !
பக்கத் துணையிருக்கப் பார் !
பாரென்றால் பாரா திருப்பாயா ? யானோதான்
நாரென்றால் நீதான் நறுமலரே ! - ஊரென்றால்,
உன்றன் மலையிருக்கும் ஊரது தானென்பேன் !
சொன்னால் இனிக்கும் சுகம் !
இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.
புதையல்
-
▼
09
(74)
-
▼
6
(16)
- தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3
- களம் ஒன்று ! கவிதை நூறு ! - 1
- அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 4
- நீ வளர்ந்துவிட்டாய் !
- தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2
- தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1
- எமக்கு எவருமில்லையா ? சொல்லுங்கள் !!!
- எட்டப்பன் மார்கள் இருக்கும் வரை....
- அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 3
- சில ஐயங்களும் தீர்வுகளும் (சந்திப்பிழை) - 1
- அடைய நினைத்த கனவுகள்...
- அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 2
- கமம் - கிராமம்
- அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 1
- எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 5
- ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2
-
▼
6
(16)