காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
போதலை யாம்தண்ணி மப்பு.


கம்பனுடன் கவிதை போச்சாம்
தமிழ் அன்னைக்குக் கருத்தடைச் சிகிச்சை
எங்கே வச்சு ஆச்சாம்?


ஆடிக் கிருத்திகை அரோகரா
போட்டுப் போனால் சென்னி மலைமேலே
கேட்டும் பாடல் " வசீகரா"


பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன்நண்டு வகையே அதிகம்.


குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதியவை.