வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கமம் - கிராமம்


(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )


" ஊர் "என்பது ,இன்று , மக்கள் வாழும் இடங்களையெல்லாம் குறிக்கும் பொதுச் சொல்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தொடங்கி ஆபிரகாமின் " ஊர் " வரை இது நீள்கின்றது. "ஊர் " என்ற வழக்கு ,முதலில், மருதநிலத்தில்தான் தோன்றியது. " ஊரன் " என சங்க இலக்கியத்தில் மருதநிலத் தலைவன் மட்டும்தான் அழைக்கப்படுவான்.

பயிர்த்தொழில் செய்யத் தொடங்கியபோதுதான் , மாந்தான், ஓரிடத்தில் நிலைத்து வாழ வேண்டிய தேவைக்கு ஆளானான்.

" ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. "
( குறள் எண் : 1038 )


என்ற குறளில், ஏர்உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல்,காவல்காத்தல் ஆகிய உழவர் பணிகள் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. தங்குதல் என்னும் பொருள் " உறு " என்ற சொல்தான், மருதநிலத்தில், நிலையாக மக்கள் தாங்கிய வாழிடம் குறிக்க,உறு - ஊர் எனப் பெயர்ந்தது.

இந்திய மொழிகள் பலவற்றில், கமம், காமம் என்ற சொற்களும், இவற்றின் திரிபான க்ரமம், க்ராமம் என்ற சொற்களும் மக்கள் வாழிடங்களைக் குறிக்கின்றன. கமம்,காமம் என்ற சொற்களின் தமிழிய வடிவமே கிராமம் என நாம் இன்று அழைப்பது.

" கமம் நிறைந்தியலும் " என்பது தொல்காப்பியம். " கமம் " என்பதற்கு நிறைவு, செறிவு என்பனவே மூலப்பொருள். " கமஞ் சூல் மாமழை " என்ற சங்கத் தொடருக்குச் சூல்நிறைந்த முகில் என்பதே பொருள். நிறைவு எனப் பொருள்பட்ட இந்தக் கமம், மக்கள் நெருங்கி வாழும் ( உறு - ஊர் போல் ) இடம் குறிக்கவும் பொருள் விரிவு பெற்றது.

கமம் , காமம் என்ற இம் மூலவடிவிலேயே மக்கள் செறிந்து, வாழும் " ஊர் " ,இன்று, தமிழ்நாட்டில் குறிக்கப்பட வில்லை.
ஆனால் தமிழீழத்தில் பனங்காமம்,கதிர்க்காமம்,வலிக்காமம் எனப் பல காமங்கள் சிற்றூர்ப் பொருளில் வழக்கத்தில் உள்ளன.

சிங்களம் " கமம் " சொல்லைக் " கம "( gama ) என ஒலித்து, ஊர்ப்பெயராக அழைக்கிறது.நெல் விளையும் ஊர் நெல்லூர் என்னும் பனை விளையும் ஊர் பனையூர் என்றும் அழைக்கப்படுவது தமிழ் மரபு.இவ்வாறு, நிலைத்திணைகளால் ஊர்கள் பெயர்பெறுதல் பொதுமரபாகும்.அவ்வகையில், நொச்சி என்னும் நிலைத்திணையுள்ள ஊர் நொச்சியூர் என அழைக்கப்படுதல் பொருத்தம். தலைநகர் சென்னை, " நொச்சிக்குப்பம் " ஊர் உண்டு; " குப்பம் " என்பது கும் - கும்பு - குப்பு - குப்பம் எனக் கூட்டப் பொருளில் உருவான சொல்லேயாகும். புத்தளம் பகுதியை ஒட்டிய சிங்கள ஊர், இன்று " நொச்சிகம "
என அழைக்கப்படுகிறது. " கம " , " ஊர் " என்னும் பொருளில், பல ஊர்கள் சிங்கள நாட்டில் வழங்கப்படுகின்றன.

Gama - Gam - Village , Landed property

Gam - Vasiya - Villager


என்பன சிங்கள அகராதி தரும் விளக்கம்.

An Etymological Glossary of the sinhalese language.

புதையல்