வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2

இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.


இதோ என்னுடைய சில ஓசை ஒத்தப்பாக்கள் ( Limeriaku ).
உங்களின் பார்வைக்கு

விண்ணைத் தொடும் விலைவாசி
கண்ணைக் கட்டும் பொழுது
மண்ணில் யாரப்பா சுகவாசி.

திருடன் என்றால் கம்பு
அரசியல் வாதி என்றால்
நமக்கு ஏன் வம்பு.

அன்று மணத்தது பூக்கடையாய்
அரசியல், இன்றோ
அசுத்தம் நிறைந்த சாக்கடையாய்.

கருத்தும் கதையும்
மாறிப் போய் இன்று திரைப்படத்தில்
விரசமும் சதையும்.

புதையல்