வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

௰௧.பலாப்பழமும் பலகையும் - 1


பழம் என்ற உடன் நம் அனைவரின் நினைவற்கு வருவது வாழைப்பழம் தான்.வாழையின் வரலாற்றைச் சொல்லும்பொழுது அது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது என்று கூறப்படும்.
மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் என்றால் அது பலாப்பழமாகும்.இதனுடைய வரலாற்றைப் பார்த்தால் குறிப்பாக இந்தியா என்று சொல்லுவது உண்டு.மேலும் மரப்பலகைகள்
பலா மரத்திலிருந்து வெட்டி எடுத்துச் செய்யப்பட்ட காரணத்தால் அது பலகை என்று வந்ததாக
சொல்லுவது உண்டு


பலா - பலகை

இப்படி எல்லாம் மொழி ஆய்வுகள் செல்லுவது உண்டு. இந்தப் பலகை என்னும் சொல் தமிழுக்கு தான் எத்தனை கலைச்சொற்களை உருவாக்க காரணமாகி இருக்கிறது.

எடுத்துக்காட்டாக,

கணினித் துறையில் keyboard என்பதை தட்டுத் தடுமாறி தட்டச்சுப் பலகை என்று மொழியாக்கம் செய்தோம்.இன்று அதைவிட அருமையான சொல் ஆக விசைப் பலகை என்று அமைத்துக் கொண்டோம்.இன்னும் இதைவிட கணினிப் பலகை என்று மொழியாக்கம் செய்வதைக் காணும்பொழுது மகிழ்ச்சியில் மனம் திழைக்கிறது.

சேவியரின் இணையக்காதல் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் படித்துப் பாருங்கள், உண்டாகும் உவகையே தனிந்தான்.

மடிமீது தலைசாய்த்து
மகரந்தங்கள் மயங்காமல்,
விசைப்பலகையில் விரல் இருத்தி
காதலை நிலை நிறுத்தல்
சாத்தியமிங்கே.


கடற்கரையில் கால் படுவதை விட
கணிணிப் பலகையில்
விரல் தொடுவதையே
விரும்புகிறது கல்லூரி வட்டம்.


ஒன்றைத் திரும்ப திரும்ப சொல்லும்பொழுது அகத்தில் அழியாத கோலமாய் பதிவதைக் காணலாம்.அப்படிப் பட்ட செயலைச் செய்வது தான் Advertising . தமிழில் விளம்புதல் என்றால் ஒன்றைத் திரும்ப திரும்ப சொல்லுவது அல்லது அழுத்தம் திருத்தமாக சொல்லுவது என்று பொருள்.அதனால் தான் Advertising என்றால் விளம்பரம் என்று வரையறுத்துக் கொண்டோம்.
Hoardings என்றயுடன் அசைந்துப் போகாமல் விளம்பரப் பலகை என்று வண்ணம் தீட்டிக் கொண்டோம்.

இப்படி எல்லாம் தமிழை வளர்த்தால், இன்னல்கள் எல்லாம் இன்பங்களாக அமைந்துவிடும்.
தடுமாற்றங்கள் எல்லாம் தேவையில்லை, மனமாற்றங்களே போதும். மங்காத தமிழ் மலர.

சொல் அகராதி


1.fruit - பழம்
2.Banana - வாழைப்பழம்
3.History - வரலாறு
4.Tree - மரம்
5.Jackfruit - பலாப்பழம்
6.Plank - பலகை
7.keyboard - விசைப் பலகை, தட்டச்சுப் பலகை
8.Advertising - விளம்பரம்
9.Hoardings - விளம்பரப் பலகை

புதையல்