வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

௯.சந்தியும் சந்திப்பும்ஓற்றுப் பிழையைச் சந்திப் பிழை என்றும் வழங்குவர். தன் காதல் கடித்தில் நேர்ந்துவிட்ட ஒரு சந்திப் பிழை குறித்துக் காதலன் ஒருவன் தன் காதலிக்கு எழுதும்
கடிதத்தை / கவிதையைக் கீழே காணலாம்.

"அன்பே !
உன் தந்தை
தமிழாசிரியராய் இருக்கத்
தகுதியே இல்லாதவர்
' ஆருயிர் காதலிக்கு '
என்று தொடங்கி
நான் உனக்கு எழுதிய காதல் கடிதத்தைக்
கள்ளத் தனமாய்ப் படித்தவர்
' சந்திப் பிழை '
என்றால் சரியென்றிருப்பேன்.
ஆனால், நம்
' சந்திப்பே ' அல்லவா பிழை என்கிறார் ? "

" ஆருயிர்க் காதலிக்கு " என்று ஒற்றிட்டு எழுத வேண்டிய தொடரை * " ஆருயிர் காதலிக்கு " என்று நான் எழுதியது தவறு தான் ; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் , பிழையான தமிழைத் திருத்த வேண்டி தமிழாசிரியராகிய உன் தந்தை நம் காதலுக்குத் தடை போடுகிறாரே ! " என்று எண்ணும் இளைஞனின் உள்ளத்தை/ ஏளனத்தை/ நையாண்டியை இந்தப் புதுக்கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

( மருதூர் அரங்கராசன் எழுதிய நூலிருந்து )

இந்த வரிகளைப் படிக்கும்பொழுதே முடிந்தவரை எழுத்துப் பிழையின்றி எழுதவேண்டும் என்னும் எண்ணத்தை என்னுள் விதைத்தது .
இந்தக் கவிதை தமிழின் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்குவதையும் உணர முடிகிறது.

புதையல்