வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வண்டும் தமிழும்தொளைத்துச் சொல்லும் இயல்பு காரணமாக வந்த பெயர் இது. பழம், மலர் முதலியவற்றைத் தொளைப்பது வண்டு.வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு.

ப்ரியன் அவர்கள் காதலை வண்டாக வடிவம் கொண்டு வரைந்திருக்கும் வரிகள் பாருங்கள்.

நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!

காதல் என்னும் வண்டு இதயத்தில் நுழைந்து புரியும் செயலைச் சொல்லும் சுகமே தனித்தான்.

1) ஓரறிவு-புல்லும்,மரமும் (நகர முடியாதவை).
2) ஈரறிவு-சிப்பி, சங்கு (நகர கூடியவை ).
3) மூவறிவு- கரையான், எறும்பு (பறக்க முடியாதவை ).
4) நாலறிவு- தும்பி,வண்டு (பறக்க கூடியது).
5 )ஐந்தறிவு- மிருகம் (கண்டு,கேட்டு, உண்டு, வாழும் ).
6)ஆறறிவு- மனிதன் ( பகுத்தறிவு உடையவன் ).

என்று அறிவை ஆறாகப் பிரித்து வண்டை நான்கறிவு உயிர் என்றுசொல்லுவதைக் காணும்பொழுது அகம் மகிழ்கிறது.ஆனால் மனிதன் செய்யும் செயலை நோக்கும்பொழுது அவனை ஓரறிவு உயிரைவிட தாழ்த்துகிறது.

கிராமங்களில் தென்னை அல்லது பனை மரத்திலிருக்கும் கொடிய வண்டை கதண்டு என்று கூறுவதுண்டு.

அரிசி, பருப்பு போன்ற பொருளில் வண்டு,பூச்சி வராமல் இருக்க ஓன்று / இரண்டு கிராம்பு போட்டு வைப்பது வழக்கம்.

"
தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று
தடங்கையா லெடுத்துமுன் பார்த்தாள்
வானுற்ற்மதியும் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
புதுமையோ விதுமெனப் புகன்றாள். "

என்னும் இந்தப் பாடலில் வண்டுகளைக் கொண்டு ஒரு விளையாட்டே விளையாடி இருப்பதை கண்டுக் களிக்கலாம்.

புதையல்