வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வள்ளமும் தமிழும்வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு. இந்த வேர்ச்சொல்லில் இருந்து எண்ணற்ற கிளைச்சொற்கள் தமிழில் முகிழ்த்துள.அதிலிருந்து
பிறந்த சொல் தான் வள்ளம் என்னும் சொல்.

தோணியில் ஒரு வகை. நடுவே தொளைக்கப்பட்ட பகுதியை உடையது என்ற பொருளில், வள் என்ற வேர் இந்தச் சொல்லைத் தந்துள்ளது.

கம்பர் வள்ளம் என்பதைக் கிண்ணம் அல்லது கோப்பை என்னும் பொருள் குறிப்பிடுவார். பின் வரும் இரண்டு பாடல்களைக் காண்க.

"பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்."

இங்கே பளிக்கு வள்ளத்து - பளிங்குக் கிண்ணத்தில் என்று பொருள் படும்.

" கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை' என்றாள் "

மணி வள்ளத்துள்ளே - மணிகள் பதித்த கிண்ணத்தில் என்பது பொருள்

இன்னும் சொல்வது என்றால் திருமுறையில் வள்ளம் என்பது கிண்ணம் பொருளில்

" விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே."

வருவதைக் காண முடிகிறது.

கொங்குப் பகுதியில் அரப்பு , பருப்பு முதலியவற்றை படி என்னும் அளவைக் கொண்டு தான் வாங்குவார்கள் .

எடுத்துக்காட்டாக

நான்கு படி என்பதை ஒரு வள்ளம் என்றும்,
இரண்டுபடி என்பதை ஒரு பக்கா என்றும் விளம்புவது வழக்கம்

புதையல்